சுவீடிஷ் மகுட இளவரசிக்கும், அவரது கணவருக்கும் கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, March 12, 2021

சுவீடிஷ் மகுட இளவரசிக்கும், அவரது கணவருக்கும் கொரோனா

சுவீடிஷ் மகுட இளவரசி விக்டோரியா மற்றும் இளவரசர் டேனியல் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் தற்சயம் அரச தம்பதிகள் நலமாக உள்ளதாகவும் ஹாகா கோட்டையில் உள்ள தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அப்டன்ப்ளேடெட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தம்பதியரைச் சூழவுள்ளவர்கள் ஏற்கனவே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மகுட இளவரசி விக்டோரியா மற்றும் இளவரசர் டேனியல் ஆகியோர் சமீப நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரையும் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad