பிரபல பாதாள உலக தலைவனும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கெசல்வத்த தினுகவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

பிரபல பாதாள உலக தலைவனும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கெசல்வத்த தினுகவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது

டுபாயில் அண்மையில் உயிரிழந்த பிரபல பாதாள உலக தலைவனும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கெசல்வத்த தினுக எனும் ஆர்.ஏ.தினுக மதுஷானின் உடல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் சுட்டுக் கொலை செய்தல், அச்சுறுத்தி கப்பம் பெறுதல், போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் விபசாரம் உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புபட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் கெசல்வத்த தினுக பின்னணியில் செயற்பட்டிருந்தததாக நம்பப்படும் நிலையில் அவர் பொலிஸாருக்கு அவசியமான சந்தேக நபராக விளங்கினார்.

இந்நிலையிலேயே அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.

டி.என்.ஏ பரிசோதனையைத் தொடர்ந்து சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad