நுகர்வோரின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

நுகர்வோரின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவும்

(எம்.மனோசித்ரா)

இன்று வியாழக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் 3,363 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வாரங்களில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. தற்போது நாட்டில் கொவிட் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், கொவிட் அச்சுறுத்தல் நிலைமை இன்னும் மாற்றமடையவில்லை என்றார்.

இந்நிலையில், பண்டிகைகளின் போது ஆடை மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், வியாபார நிலைய உரிமையாளர்களும் நுகர்வோரின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment