பிரேசிலில் ஒரே நாளில் 90,303 பேருக்கு கொரோனா - 2,648 உயிரிழப்புகள் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

பிரேசிலில் ஒரே நாளில் 90,303 பேருக்கு கொரோனா - 2,648 உயிரிழப்புகள்

தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து வரும் நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் சாதனை எண்ணிக்கையாக கடந்த புதனன்று 90,303 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இது தவிர, கடந்த புதனன்று 2,648 உயிரிழப்புகள் இடம்பெற்றதாக பிரேசில் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி அந்நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு சம்பவங்கள் 282,000 க்கு மேல் பதிவாகி உள்ளது. இது அமெரிக்காவுக்கு மாத்திரமே இரண்டாவதாக உள்ளது.

இதற்கு முந்தைய நாளில் பிரேசிலில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 2,841 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொற்றை குறைத்து மதிப்பிட்டு வரும் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோவுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. 

நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்க பிரேசிலில் நான்கு சுகாதார அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பொது முடக்கத்தை கொண்டு வர பிராந்திய அரசுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் கொரோனா தடுப்பு மருந்து திட்டமும் தாமதிப்பது பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad