சிறைச்சாலைகளில் இதுவரை 5019 பேருக்கு கொரோனா - 5153 கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

சிறைச்சாலைகளில் இதுவரை 5019 பேருக்கு கொரோனா - 5153 கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கொவிட்-19 வைரஸ் கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 5019 வரை அதிகரித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த கொவிட்-19 வைரஸ் கொத்தணி காரணமான இதுவரையில் 5019 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 4789 பேர் குணமடைந்துள்ளதுடன், 217 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்காக இதுவரையில் 30 ஆயிரத்து 744 பேர் அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசொதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிரதேச வைத்திய பிரிவினரின் உதவியுடன் 5153 கைதிகளுக்காக கொவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் கொவிட் தடுப்பூசிகளை கைதிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

இதன்போது வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரையில் 11 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad