ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டொலர் கொரோனா நிதி - மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டொலர் கொரோனா நிதி - மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர். இதனால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

இதற்கிடையே அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரி 20ம் திகதி பதவி ஏற்ற ஜோ பைடன், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டொலர் செலவில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை ஜோ பைடன் கொண்டு வந்தார்.

இந்த கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது.

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி மசோதாவில் அதிபர் ஜோ பைடன் இன்று கையெழுத்திட்டார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன்பெறும். இந்த மாதத்துக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டொலர் (இலங்கை மதிப்பில் ரூ. 2 லட்சத்து எழுபத்தையாயிரத்து 170) வழங்கும் பணி தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment