உலகில் மதிப்பீடு செய்யப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு 129 ஆவது இடம் ! எதற்குத் தெரியுமா ? - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

உலகில் மதிப்பீடு செய்யப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு 129 ஆவது இடம் ! எதற்குத் தெரியுமா ?

உலகில் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியல் 2021 இல் மதிப்பீடு செய்யப்பட்ட 149 நாடுகளில் இலங்கை 129 ஆவது இடத்தில் உள்ளது.

தரவரிசையில் அதிக மதிப்பெண் பெற்ற ஏனைய நாடுகளில் டென்மார்க், சுவிற்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை அடங்கும். 

அமெரிக்கா 19 ஆவது இடத்தில் உள்ளது. கனடாவை விட ஐந்து இடங்கள் பின்னால் உள்ளது. பாகிஸ்தான் 105 வது இடத்திலும், சீனா 84 வது இடத்திலும், இந்தியா 139 வது இடத்திலும், பங்களாதேஷ் 101 வது இடத்திலும் உள்ளன.

ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் குழுவால் வெளியிடபட்ட இந்த அறிக்கை வாழ்க்கை மதிப்பீடுகள், நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் ஆகிய மூன்று முக்கிய குறியீடுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

முந்தைய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்தீர்களா அல்லது சிரித்தீர்களா என்று பதிலளித்தவர்களிடம் கேட்டு நேர்மறையான உணர்ச்சிகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளன.

கவலை, சோகம் மற்றும் கோபம். நேர்மறையான தாக்கத்தைப் போலவே தேசிய சராசரிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.

தங்கள் வாழ்க்கையை மதிப்பீடு செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டு அவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கை 10 ஆகவும், மோசமான வாழ்க்கை பூஜ்ஜியமாகவும் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மகிழ்ச்சியாக உள்ள முதல் 20 நாடுகள்
1. பின்லாந்து
2. டென்மார்க்
3. சுவிட்சர்லாந்து
4. ஐஸ்லாந்து
5. நெதர்லாந்து
6. நார்வே
7. சுவீடன்
8. லக்சம்பர்க்
9. நியூசிலாந்து
10. ஆஸ்திரியா
11. ஆஸ்திரேலியா
12. இஸ்ரேல்
13. ஜெர்மனி
14. கனடா
15. அயர்லாந்து
16. கோஸ்டாரிகா
17. இங்கிலாந்து
18. செக் குடியரசு
19. அமெரிக்கா
20. பெல்ஜியம்

No comments:

Post a Comment