அலுவலக சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு - போக்கு வரத்து அதிகார சபை - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

அலுவலக சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு - போக்கு வரத்து அதிகார சபை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அலுவலக ஊழியர்களின் போக்கு வரத்து வசதிக்காக பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பஸ் வண்டிகளில் பஸ் தரிப்பிடங்களில் நின்று கொண்டிருக்கும் பயணிகளையும் ஏற்றிச் செல்வதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்கு வரத்து அதிகார சபை தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் அலுவலக ஊழியர்களை கொண்டு செல்வதற்காக தனியார் பஸ்களை ஈடுபடுத்தியிருந்தபோதிலும், குறித்த பஸ்களில், பஸ் தரிப்பிடங்களில் நின்று கொண்டிருக்கும் பயணிகளையும் ஏற்றிச் செல்வது தொடர்பான புதிய பிரச்சினை ஒன்றும் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிப் போக்கு வரத்து அதிகார சபை தெரிவிக்கிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 7 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad