தொடர்ந்தும் உண்மைத் தன்மையை மறைத்து வந்தால், நாடென்ற ரீதியில் பாரிய கஷ்டத்துக்குள் விழ வேண்டி வரும் - வைத்திய அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

தொடர்ந்தும் உண்மைத் தன்மையை மறைத்து வந்தால், நாடென்ற ரீதியில் பாரிய கஷ்டத்துக்குள் விழ வேண்டி வரும் - வைத்திய அதிகாரிகள் சங்கம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை எதிர்வரும் சில வாரங்களில் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு பூராவும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் கட்டுப்படுத்தலுக்கு அல்லது மரணங்களின் எண்ணிக்கையை தடுப்படுதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் போதுமானதல்ல எனவும் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கம் குறிப்பிடுகிறது.

மேலும், பி.சி.ஆர் பரிசோதனைகளை சரிவர செய்தால் தற்போது காணப்பட்டு வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரிகக்கூடும் என அச்சங்கம் தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளைக் காட்டிலும், தொடர்ந்தும் உண்மைத் தன்மையை மறைத்து வந்தால், நாடென்ற ரீதியில் பாரிய கஷ்டத்துக்குள் விழ வேண்டி வரும் என அரசங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகையால், இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதாயின் சமூக மற்றும் அரச செயற்திட்டங்கள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad