ரஞ்சனின் பாதுகாப்பு இனி எனது பொறுப்பு - அமைச்சர் ரத்வத்த - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

ரஞ்சனின் பாதுகாப்பு இனி எனது பொறுப்பு - அமைச்சர் ரத்வத்த

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாதுகாப்பு வழங்கும் முழு பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். 

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெளிவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றில் கேட்டுக் கொண்டனர்.

அத்தோடு ரஞ்சன் ராமநாயக்கவை நாளைய பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி பாராளுமன்றத்தில் போராட்டத்தையும் நடத்தினர்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பிற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad