மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்

மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக யாழ். மாநகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வு பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெனாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்ட மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மேலும் விரைவாகவும், வினைத்திறனாகவும் நிறைவேற்றும் பொருட்டும், இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தைக் கவனத்திற்கொண்டு யோகேஸ்வரி பற்குணராசாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான யோகேஸ்வரி பற்குணராஜாவின் குறித்த நியமனம், பெப்ரவரி 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment