நிந்தவூர் கடலில் மூழ்கிய மீன்பிடி படகு : மீனவர்களும், படகும் மக்களினால் காப்பாற்றப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

நிந்தவூர் கடலில் மூழ்கிய மீன்பிடி படகு : மீனவர்களும், படகும் மக்களினால் காப்பாற்றப்பட்டது

நூருல் ஹுதா உமர்

இலங்கையின் கிழக்கு கடலின் கடுமையான கொந்தளிப்பு மற்றும் கடலரிப்பு காரணமாக மீனவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. 

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னர் அப்பிரதேசத்தை அண்டிய சகல பிரதேசங்களும் கடலரிப்புக்கு வெகுவாக பாதித்து வருகிறது.

இன்று மாலை 6.00 மணியளவில் நிந்தவூர் கடலில் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய மீன்பிடி படகொன்று கடலலைக்கு தாங்கிப்பிடிக்க முடியாமல் கடலில் மூழ்கியது. 

அப்பிரதேசத்தில் குழுமியிருந்த மக்களினால் சிறிய காயங்களுடன் அதனில் இருந்த மீனவர்கள் கரை சேர்க்கப்பட்டதுடன், மீன்பிடி படகும் சேதங்கள் இல்லாமல் கரைக்கு இழுத்து வரப்பட்டது. 

இந்த சம்பவம் கரையோரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad