பாடசாலை பெண் மாணவிகளுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார் நியூசிலாந்து பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

பாடசாலை பெண் மாணவிகளுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார் நியூசிலாந்து பிரதமர்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வறுமையை போக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நியூசிலாந்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஜூன் மாதம் முதல் இலவசமாக மாதவிடாய்க்கான பாதுகாப்பு சுகாதார பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வறுமையை போக்க மாதவிடாய்க்கான பாதுகாப்பு சுகாதார பொருட்கள் மற்றும் மாதவிடாய் சுகாதாரத்திற்கு தேவையான சுத்தமான நீர் மற்றும் ஏனைய இதர வசதிகள் இல்லாமை ஆகும்.

இந்நிலையில், நியூசிலாந்தில் டம்பான்கள் (tampons) மற்றும் சானிடரி நாப்கின்கள் போன்ற தயாரிப்புகளை வாங்க முடியாததால் சில பெண் மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்க்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இலவசாமாக மாதவிடாய்க்கான பாதுகாப்பு சுகாதார பொருட்களை வழங்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு 15 பாடசாலைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இது தொடர்பில் கூறுககையில், இளைஞர்கள் தங்கள் கல்வியைத் தவறவிடக் கூடாது, ஏனென்றால் மக்கள் தொகையில் அரைவாசி பேருக்கு இது வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாகும்.

நியூசிலாந்தில் 12 பேரில் ஒருவர் மாதவிடாய் காலத்தில் வறுமை காரணமாக பாடசாலைகளை தவிர்க்கிறார்கள். குறைந்த வருமானம் உள்ளவர்களால் பொருத்தமான மாதவிடாய்க்கான தயாரிப்புகளை வாங்கவோ உபயோகிக்கவோ முடியாது.

மாதவிடாய்க்கான பாதுகாப்பு சுகாதார பொருட்கள் இலவசமாக வழங்குவது அரசாங்கம் வறுமையை நிவர்த்தி செய்வதற்கும், பாடசாலை வருகையை அதிகரிப்பதற்கும், குழந்தைகளின் நல்வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு வழியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு தற்போது முதல் 2024 வரை 25 டொலர் (£ 13m, £ 18m) நியூசிலாந்து அரசாங்கத்தினால் செலவாகும்.

கடந்த நவம்பரில், ஸ்கொட்லாந்து பொது இடங்கள் உட்பட தேவைப்படும் எவருக்கும் மாதவிடாய்க்கான பாதுகாப்பு சுகாதார பொருட்களை இலவசமாக வழங்கிய உலகின் முதல் நாடாக மாறியது.

இங்கிலாந்தில், கடந்த ஆண்டு அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளிலும் இலவசமாக மாதவிடாய்க்கான பாதுகாப்பு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு சில அமெரிக்க மாநிலங்களும் பாடசாலைககளில் மாதவிடாய்க்கான பாதுகாப்பு சுகாதாரப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்டங்களை இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் மாதவிடாய் மீதான வறுமை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment