ஜோன்சன் அண்ட் ஜோன்சன் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - ஆய்வில் தகவல் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 25, 2021

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - ஆய்வில் தகவல்

அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பாய்வில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் மருந்து நிறுவனம் தயாரிப்பான ஒற்றை 'டோஸ்' கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒரு சில நாட்களில் அனுமதி அளிக்கப்பட்டவுள்ளது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டுமா என பரிந்துரைக்க நிபுணர்களின் குழு ஒன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் உடனடியாக 40 இலட்சம் தடுப்பூசி ஏற்றுமதிக்கு தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28,334,981 பேர் உயிரிழந்துள்ளதுடன், 505,808 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment