ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு கோரிக்கை? - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு கோரிக்கை?

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளிற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத மற்றும் இன ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான நடவடிக்கைகளில் ஈடுபட உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண்பதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு குற்றவியல் நடவடிக்கைகளிற்கு பரிந்துரைத்துள்ளது.

எனினும் இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment