ரஷியா, ஈரான், சீன கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி - அமெரிக்கா என்ன சொல்கிறது? - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

ரஷியா, ஈரான், சீன கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி - அமெரிக்கா என்ன சொல்கிறது?

ரஷியா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போகின்றன.

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷியா, ஈரான், சீனா ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் இந்த மாதம் மத்தியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போகின்றன.

இதற்கான அறிவிப்பை ஈரானுக்கான ரஷிய தூதர் லெவன் தாகரியன் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த 3 நாடுகளின் கடற்படைகளும் கடைசியாக 2019ம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இப்போது 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் இந்த நாடுகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் அதை அந்த நாடு வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இதையொட்டி அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. 

இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், உலகெங்கும் உள்ள எங்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், நம்முடைய திறனுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதவில்லை” என கூறினார்.

No comments:

Post a Comment