சடலங்கள் மீள் பி.சி.ஆர் பரிசோதனை - மனுவை நிராகரிக்குமாறு அறிவித்தார் சட்டமா அதிபர் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

சடலங்கள் மீள் பி.சி.ஆர் பரிசோதனை - மனுவை நிராகரிக்குமாறு அறிவித்தார் சட்டமா அதிபர்

மரணத்தின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளராக இனம் காணப்படும் சடலங்களை மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் இப்ரா லெப்பே மொஹமட் ஹக்கீம் என்பவரால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையிலேயே மேற்படி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு மேற்படி மனுவின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கிரம டி ஆப்ரூ மூலம் அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad