இலங்கையில் 4 பிரதேசங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - வைத்தியர் சந்திம ஜீவந்தர - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

இலங்கையில் 4 பிரதேசங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - வைத்தியர் சந்திம ஜீவந்தர

(எம்.மனோசித்ரா)

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை உருமாறிய வைரஸ் இங்கையிலும் 4 பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளிலேயே இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனவரி மாதத்தின் மத்தியிலிருந்து பெப்ரவரி மாதம் வரை 92 மாதிரிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கொழும்பு, இங்கிரிய, அவிசாவளை, மத்துகம, பியகம, வத்தளை, மத்துகம, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களிடமும் பெற்றுக் கொண்ட மாதிரிகளிலேயே இந்த புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. ஏனைய வைரஸை விட இந்த வைரஸானது குறைந்தளவு 50 சதவீதம் வேகமாக பரவக் கூடியதாகும். 

இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய இலங்கையில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment