பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

இந்தியா - விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலியாகியோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்தோடு, இந்த ஆலையிலுள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மொத்தம் 6 பேர் மீது பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad