போர்த்துக்கல் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

போர்த்துக்கல் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா

போர்த்துக்கல் நாட்டு ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சவுசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படவில்லை.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை, இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனையிலும் தொற்று உறுதியாகவில்லை, ஆனால் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

போர்த்துக்கல் ஜனாதிபதியின் பங்கேற்புடன் வரும் நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 24 ஆம் திகதி போர்த்துக்கலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, இதில் 72 வயதாகும் மார்செலோ ரெபெலோ டி சவுசாவுக்கு மீண்டும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad