இலங்கையைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்களுக்கு 'அக்கமஹபன்டித' கௌரவ மத அந்தஸ்த்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

இலங்கையைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்களுக்கு 'அக்கமஹபன்டித' கௌரவ மத அந்தஸ்த்து

இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த மதகுருமார்கள் மற்றும் ஒரு சாதாரண நபருக்கு 'அக்கமஹபன்டித' என்ற கௌரவ மத அந்தஸ்த்தினை வழங்குவதற்கு மியான்மார் ஜனாதிபதி யு வின் மைண்ட் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மியான்மார் சுதந்திர தினத்தின் 73ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த மதகுருமார்கள் மற்றும் ஒரு சாதாரண நபருக்கு 'அக்கமஹபன்டித' என்ற கௌரவ மத அந்தஸ்த்தினை வழங்குவதற்கு மியான்மார் ஜனாதிபதி யு வின் மைண்ட் தீர்மானித்துள்ளார்.

தெஹிவளை ஸ்ரீ மஹா போதி மஹா விஹாரையின் வணக்கத்துக்குரிய மிஹிரிபென்னே சோபித்த தேரோ, களனிய ரஜமஹா விகாரை மற்றும் கித்சிரிமேவன் ரஜ மஹா விகாரையின் வணக்கத்துக்குரிய கலாநிதி. கொல்லுப்பிட்டியே மஹிந்த சன்ஹ ரக்கித மஹா தேரோ, ஸ்ரீ அமரபுர தர்மரக்ஷிதவம்ச மஹா நிகாயவின் வணக்கத்துக்குரிய திரிகுணாமலே ஆனந்த மஹாநாயக்க மஹா தேரோ, ஸ்ரீ கெலயனிவாச, அமரபுர மஹா நிகாயவின் வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்திரசிரி மஹா நாயக்க தேரோ ஆகியோருக்கு அக்கமஹபன்டித பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய கால்லெல்ல சுமனசிறி தேரோ அவர்களுக்கு அக்கமஹ சத்தம்ம ஜோதிக தஜ என்ற கௌரவ மதப்பட்டம் வழங்கப்பட்ட அதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த ஆய்வுகள் திணைக்களத்தின் பேராசிரியர் கலாநிதி. வணக்கத்திற்குரிய மேதகம்பிட்டியே விஜிததம்ம தேரோ அவர்களுக்கு அக்கமஹ காந்த வச்சிக பண்டித என்ற கெளரவ மதப்பட்டம் வழங்கப்பட்டது.

பிலியந்தலை தும்போவிலபுரான மஹா விகாரையின் வணக்கத்துக்குரிய தும்போவில தம்மரத்தன தேரோ மற்றும் தம்ரிவி அறக்கட்டளையின் பேராசிரியர் (ஓய்வுபெற்ற) அசங்க திலகரத்ன ஆகியோருக்கு மஹா சத்தம்ம ஜோதிக தஜ என்ற கௌரவ மதப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அக்கமஹபன்டித என்பது மியான்மார் அரசாங்கத்தால் புகழ்பெற்ற தேரவாத பௌத்த பிக்குக்களுக்கு வழங்கப்படும் ஒரு மரியாதைக்குரிய பௌத்த பட்டமாகும். 

அக்கமஹபண்டித என்பதன் பொருள், 'முதன்மையான சிறந்த மற்றும் புத்திசாதுரியமான ஒருவர்' ஆவதுடன், இது பின்வரும் பாலி சொற்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. தம்மத்தை கற்பிப்பதில் அதிகம் தேர்ச்சி பெற்ற பௌத்த பிக்குக்களுக்கு இந்தப்பட்டம் வழங்கப்படுகின்றது. 

மியான்மரில் சங்கவை (பௌத்த மதகுருமார்கள்) மேற்பார்வை செய்யும் மற்றும் ஒழுங்குபடுத்தும் உயர் பதவிநிலை பௌத்த பிக்குகளைக் கொண்ட அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பான அரச சங்க மஹா நாயக்க குழுவால் வருடாந்தம் பிக்குகளின் ஞானத்தையும் சாதனைகளையும் முழுமையாக ஆராய்ந்த பின்னர், மியான்மாரின் ஜனாதிபதி இந்தப் பட்டங்களை வழங்குவார்.

கடந்த காலங்களில் பல இலங்கைப் பிக்குக்களுக்கும் மியான்மார் அரசாங்கத்தால் அக்கமஹபன்டித பட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், மிகவும் அண்மையில் வணக்கத்துக்குரிய பேராசிரியர் கோட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரோவிற்கு 2020 இல் இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

அகமஹ சத்தம்ம ஜோதிக தஜ மற்றும் மஹா சத்தம்ம ஜோதிக தஜ ஆகியவையும் பெரும்பாலும் கல்விக்காக ஒரு குறிப்பிடத்தக்க சேவையை வழங்கும் மற்றும் தம்மத்தில் சிறந்து விளங்கும் பிக்குகளை பாராட்டுவதற்காக மியான்மார் அரசாங்கத்தால் வழங்கப்படும் பட்டங்களாகும். 

சில சந்தர்ப்பங்களில், பல சாதாரண நபர்களுக்கும் தம்மத்திற்கான அவர்களின் சேவைகளைப் பாராட்டும் முகமாக மஹா சத்தம்ம ஜோதிக தஜ பட்டம் வழங்கப்படுகின்றது.

No comments:

Post a Comment