அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் முடக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் முடக்கப்பட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள கணக்குகள் கடந்த வாரம் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

"வன்முறைக்கான சாத்தியக்கூறுகள்" இருப்பதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் சனலை தற்காலிகமாக முடக்கியதாக யூடியூப் நிர்வாகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்திய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் யூடியூப்பும் ஒன்றாகும்.

இது தொடர்பாக யூடியூப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், கூகுளுக்குச் சொந்தமான வீடியோ தளமான யூடியூப், ட்ரம்ப்பின் சமீபத்திய வீடியோக்களில் ஒன்று, பரவலான தேர்தல் மோசடி எனக் கூறி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை தடை செய்யும் கொள்கையை மீறியதை அடுத்து, சுமார் 2.8 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட சேனலில் குறைந்தது ஏழு நாட்களுக்கு புதிய உள்ளடக்கத்தை பதிவேற்ற தடை செய்துள்ளது. 

யூடியூப் வீடியோ குறித்த கருத்துகளை காலவரையின்றி முடக்குவதாகவும் தெரிவித்துள்ளது. எந்த வீடியோ அவரது கணக்கை இடைநிறுத்த தூண்டியது என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

ட்ரம்பின் சமூகவலைத்தளங்களை முடக்க பல தொழில்நுட்ப நிறுவனங்கள் நகர்ந்துள்ளன, ஏனெனில் அவரது ஆதரவாளர்களின் வன்முறைக் கும்பலால் கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத் தொகுதியை தாக்கப்பட்டது.

இதன் பின்னர், டுவிட்டரைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் ஜனாதிபதியின் முக்கிய சமூகவலைத்தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து இடைநீக்கம் செய்தது. இதனால் அவருக்குப் பிடித்த சமூகவலைத்தளங்களை இழந்துள்ளார்.

ஸ்னாப்செட், ரெடிட் மற்றும் ட்விச் போன்ற பிற சமூகவலைத்தளங்களும் ட்ரம்பிற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment