லத்தீன் அமெரிக்காவின் செல்வந்தருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

லத்தீன் அமெரிக்காவின் செல்வந்தருக்கு கொரோனா

லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான கார்லோஸ் ஸ்லிம்மிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத் துறையில் பல பில்லியன் டொலர்களுக்கு அதிபதியாக உள்ள மெக்சிகோவைச் சேர்ந்த 80 வயதான ஸ்லிம்மிடம் சிறிய நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும் அவர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும் அவரது மகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

மெக்சிகோ ஜனாதிபதிக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு ஒரு தினம் கடந்த நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றினால் உலகில் மோசமாக பதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் மெக்சிகோவில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 150,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment