ஓமான் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் நடத்த ஐசிசி அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

ஓமான் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் நடத்த ஐசிசி அங்கீகாரம்

ஓமான் கிரிக்கெட் பயிற்சியக மைதானம் 1ஐ டெஸ்ட் கிரிக்கெட் மைதானமாக பயன்படுத்துவதற்கு ஐசிசி அங்கீகாரம் அளித்துள்ளது.

ஸிம்பாப்வேக்கு எதிராக பெப்ரவரி மாதம் நடத்த ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ள தொடருக்கு முன்பதாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளுக்கு ஓமானை தனது புதிய 'தத்து' (சொந்த) மைதானமாக நிரந்தரமாக ஆப்கானிஸ்தான் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக பல தகவல்கள் கூறுகின்றன.

மஸ்கட் நகருக்கு வெளியே அல் அமீரத் தொகுதியில் அமைந்துள்ள ஓமான் கிரிக்கெட் பயிற்சியக மைதானம் 1, சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபது 20 போட்டிகள் உட்பட பல சர்வதேச தொடர்களை அரங்கேற்றியுள்ளது.

ஸிம்பாப்வே தொடர் நடைபெற்றால் டெஸ்ட் போட்டி ஒன்றை நடத்திய ஐந்தாவது இணை உறுப்பு நாடு என்ற பெயரை ஓமான் பெறும்.

ஐசிசியில் பங்களாதேஷ் இணை உறுப்பு நாடாக இருந்த காலத்தில் ஆசிய டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 1999 இல் அரங்கேற்றியிருந்தது.

அயர்லாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 2000ஆம் ஆண்டு அயர்லாந்து நடத்தியிருந்தது. 

பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியை 2002 இல் ஷார்ஜா நடத்தியிருந்தது. 

நெதர்லாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 2007 இல் நெதர்லாந்து அரங்கேற்றியிருந்தது.

கொரோனா தொற்று நோய் காரணமாக தற்போது ஸிம்பாப்வே அரசாங்கத்தினால் கடுமையான லொக்டவுன் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸிம்பாப்வேயின் ஓமான் விஜயம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad