தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது இனிவரும் காலங்களிலும் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் - இராதாகிருஷ்ணன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது இனிவரும் காலங்களிலும் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் - இராதாகிருஷ்ணன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது, இனிவரும் காலப்பகுதியிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 

அவரின் அறிவிப்பின் பிரகாரம் அடிப்படை நாட் சம்பளமாக 860 ரூபாவும், இதர கொடுப்பனவுகளாக 140 ரூபாவும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம். வாழ்க்கைச் சுட்டெண்ணுக்கமைய அவர்களுக்கான வேதனம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இனிவரும் காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும்.

அதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் இன்று படுபாதாளத்தில் விழுந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து. டொலரின் பெறுமதி உச்சம் தொட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் வைத்திருக்கும் தகைமையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பது இதன்மூலம் வெளிப்படுகிறதென்றார். 

குறிப்பாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புபட்ட மஞ்சள் விலையையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad