இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்

(எம்.நியூட்டன்)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள முன்றலில் இன்று புதன்கிழமை முற்பகல் ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் மாநகரம் ஊடாக ஸ்ரானி வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை வந்தடைந்தது.

அங்கு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கை மனுவை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியதுடன் தொடர்ந்து இந்திய துதரகத்திலும் பின்னர் வட மாகாண ஆளுநர் அலுவலகத்திலும் மகஜரினை வழங்கிசென்றனர் .

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை தனது அலுவலக முன்றலில் சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த வருட இறுதிக்குள் கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் இந்திய மீனவரின் அத்துமீறல் தொடர்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது முடிவு எட்டப்படும். 

அத்துடன் உள்ளூரிலும் சட்டவிரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும். கடல் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் கடல் வழங்கள் அழிக்கப்பட்டமையால் அங்குள்ள மீனவர்கள் அத்துமீறி எமது பகுதிக்குள் வருகிறார்கள். அத்துமீறி சட்டவிரோத தொழில் செய்வதை அனுமதிக்க முடியாது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். 

மேலும் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கு பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் வழங்கப்படும். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் நான் செய்வதாக உங்களில் உள்ள கறுப்பு ஆடு இந்திய தூதருக்கு கூறியதாக கூறப்படுகிறது அத்தகைய தேவை எனக்கில்லை நான் நல்லூறவையே விரும்புகிறேன் என்றார்.

இதேவேளை சமாசத்தலைவர் கருத்து தெரிவிக்கையில், எமது நியாமான கோரிக்கைக்காகத்தான் நாம் போராடுகின்றோம். எமது இந்த போராட்டத்தை அரியலுக்காக செய்வதாக கூறியுள்ளார்கள் எங்களுக்கு அவ்வாறு செய்ய வேண்டிய தேவையில்லை. 

அத்துமீறி தொழில் செய்வதால் எமது கடல் வளம் பாதிக்கப்படுகிறது. எமது அன்றாட பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது வளம் பாதிக்கப்படுவதால் எதிர்கால சந்ததிக்கு எதனை கொடுக்கப் போகிறோம். இதற்காகத்தான் தாம் போராடுகின்றோம். எங்களின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை முன்வைத்துள்ளோம். 

ஆனால் அவர்கள் எங்கள் மீது அரசியல் செய்கிறார்கள் அடுத்து வரும் காலங்களில் அவர்களுக்கு பதில் சொல்லுவோம் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் தாங்கள் இந்தியாவிற்கு எதிராகவோ தமிழ் நாட்டுக்கு எதிராகவோ போராடவில்லை மாறாக சட்டவிரோத தொழில்முறை அத்துமீறி தொழில் நடவடிக்கைக்காகவே போராடுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment