சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படவில்லை - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படவில்லை

சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

150 சட்டத்தரணிகளை பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக நேற்றையதினம் தகவல்கள் வெளிவந்திருந்தன என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையினால் மேற்கொள்ளவில்லை.

நீதியமைச்சும் பொதுமக்களுக்ககுமான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும். அமைச்சரவையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்பதினால் சம்பந்தப்பட அமைச்சர்களே இது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad