முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்புமில்லை என்கிறார் கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்புமில்லை என்கிறார் கம்மன்பில

யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. அது தொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.

இவ்வாறான நினைவு தூபிகள் வடக்கில் மாத்திரமின்றி நாட்டில் ஏனைய பல்லைக்கழகங்களிலும் உண்டு. இவ்வாறான நினைவு தூபிகளை உடைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இந்த பல்கலைக்கழக நினைவு தூபியை உடைப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டது பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழக நிர்வாகமும் ஆகும். அதனை மீள அமைப்பதற்கு துணைவேந்தரும், நிர்வாகமுமே தீர்மானித்தனர் என்றும் அமைச்சர் கூறினார்.

பல்கலைக்கழங்களில் இருக்க வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது துணைவேந்தரும் அதன் நிர்வாகமுமே ஆகும். இதன் அடிப்படையில் அதனை மீள அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad