முதலாளிமார் சம்மேளனத்தின் யோசனையை ஏற்கமாட்டோம், எந்த விதமான முன்னேற்றமும் இல்லாதது என்கிறார் செந்தில் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 16, 2021

முதலாளிமார் சம்மேளனத்தின் யோசனையை ஏற்கமாட்டோம், எந்த விதமான முன்னேற்றமும் இல்லாதது என்கிறார் செந்தில்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் தொழில் அமைச்சிடம் கையளித்துள்ள யோசனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவில்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று தெரிவித்தது.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் எதுவித முன்னேற்றமும் இல்லாத அந்த திட்டம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் உற்பத்தி கொடுப்பனவாக 150 ரூபாவும் வரவு கொடுப்பனவாக 150 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 105 ரூபாவை உள்ளடக்கி கம்பனிகளால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சம்பள யோசனை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இல்லாது கம்பனிகள் முன்மொழியும் எந்தவொரு சம்பளத் திட்டத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கம்பனிகளின் யோசனை சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கட்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் போதிய உயர்வு இல்லாத சம்பள யோசனைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. கம்பனிகள் முன்மொழியும் யோசனைகளில் அனைத்துத் தொழிலாளர்களும் சம்பள உயர்வை பெற்றுக் கொள்ள முடியாது.

ஒரு தொழிலாளிக்கு அரை பெயர் வழங்கப்படும் பட்சத்தில் அவருக்கு அன்றை நாளுக்கான சம்பளம் குறைவடையும். ஆகவே, இந்த யோசனையை சம்பள நிர்ணய சபையிடமே ஒப்படைத்து விட்டோம். அவர்களே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கட்டும் என்றார்.

கே.அசோக்குமார், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment