வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை 23.01.2021 இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வாரியபொல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான பி.எச்.சி ஹேரத் (வயது 35) என்பவரே பலியாகியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையின் நிமித்தம் தனது சொந்த ஊரான வாரியபொலவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த வாகனத்துடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கேஸ் சிலிண்டர் வாகன சாரதியைக் கைது செய்துள்ள வெலிக்கந்தைப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad