மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செளரவ் கங்குலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செளரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான செளரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான செளரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.

இந்நிலையில் 48 வயதான இவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு அவருக்கு உடல் நிலை அசௌகரியம் ஏற்பட்டுள்ளதோடு இன்று நண்பகல் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் கொல்கத்தா அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2ஆம் திகதி, லேசான மாரடைப்பு காரணமாக, கொல்கத்தாவிலுள்ள உட்லாண்ட்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கங்குலிக்கு, ஆன்ஜியோ பிளாஸ்டி (Angioplasty) சிகிச்சை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad