அங்கீகரிக்கப்படாத கை சுத்திகரிப்பான்களின் இறக்குமதி, விற்பனைக்கு தடை - ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் இலக்கம் காட்சிப்படுத்துவதும் அவசியம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

அங்கீகரிக்கப்படாத கை சுத்திகரிப்பான்களின் இறக்குமதி, விற்பனைக்கு தடை - ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் இலக்கம் காட்சிப்படுத்துவதும் அவசியம்

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (NMRA) பதிவு செய்யப்படாத, கை சுத்திகரிப்பான்களின் (Hand Sanitizer) இறக்குமதி, விற்பனை உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இத்தடை உத்தரவு விதிக்கப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால், அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ், குறித்த பொருளை, விற்பனை செய்வதோ, உற்பத்தி செய்வதோ, களஞ்சியப்படுத்துவதோ, விநியோகிப்பதோ, விற்பனைக்காக காட்சிப்படுத்துவதோ, விற்பனைக்காக வெளிப்படுத்துவதோ, விற்பனைக்கு கோரவோ, மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவே விற்பனை செய்யவோ முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சுத்திகரிப்பானுக்கு NMRA இனால் வழங்கப்பட்ட பதிவு இலக்கமானது, கை சுத்திகரிப்பான் பொதியில் அல்லது கொள்கலனில் தெளிவாக விளங்கக் கூடிய வகையில், காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment