மீண்டும் தனிமைப்படுத்தலை மேற்கொண்டார் அமைச்சர் சி.பி. ரத்னாயக்க - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

மீண்டும் தனிமைப்படுத்தலை மேற்கொண்டார் அமைச்சர் சி.பி. ரத்னாயக்க

வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மீண்டும் இன்று முதல் தனது இல்லத்தில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை கொவிட்-19 தொற்றுக்காளனவராக அறிவிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி இரு அமைச்சர்களும் வலப்பனையில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். 

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின்படி நடைபெற்ற இந்நிகழ்வில் வலப்பனை பிரதேச சபைத் தலைவர் ஆனந்த ஹித்திட்டிய உள்ளிட்ட ஒரு குழு பங்கேற்றதாக வலப்பனை பிரதேச அதிகாரி ஒருவர் கூறினார்.

முன்னதாக கொவிட்-19 தொற்றுக்காளான அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அமைச்சர் வைரஸ் தொற்றுக்காளாகவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad