இத்தாலி பிரதமர் இராஜினாமா - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

இத்தாலி பிரதமர் இராஜினாமா

கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வது தொடர்பில் விமர்சனத்திற்கு ஆளான இத்தாலி பிரதமர் கியுசெப்பே கொன்டே தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

கொவிட்-19 காரணமாக இத்தாலியில் 85,000 க்கும் அதிமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் செனட்டில் பெரும்பான்மையை இழந்த கொன்டேவுக்கு ஜனாதிபதி வலுவான அரசொன்றை அமைப்பதற்கு ஆணையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைச் செய்ய அவர் தவறினால் அந்த வாய்ப்பு வேறு ஒருவருக்குச் செல்லும். அந்த முயற்சியும் தவறும் பட்சத்தில் இத்தாலியில் புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படும்.

நேற்றுக் காலை அமைச்சரவை கூட்டத்தில் தாம் பதவி விலகும் முடிவை வெளியிட்ட நிலையில் அது பற்றி ஜனாதிபதியை அறிவித்தார். 

2018 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதமராக பதவி வகித்து வரும் கொன்டே, கடந்த வாரம் கீழவையில் இடம்பெற்ற பதவி நீக்க வாக்கெடுப்பில் இருந்து தப்பினார். 

ஆளும் கூட்டணியில் இருந்து முன்னாள் பிரதமர் மட்டியோ ரெக்சியின் கட்சி வெளியேறியதை அடுத்தே அங்கு அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment