சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 55 மில்லியன் ரூபா பெறுமதியான 12 வாகனங்கள் கைப்பற்றல் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 55 மில்லியன் ரூபா பெறுமதியான 12 வாகனங்கள் கைப்பற்றல்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 12 வாகனங்களை சுங்கம் கைப்பற்றியுள்ளது.

55 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் களஞ்சியத்தில் மூன்று கொள்கலன்களை சோதனைக்குட்படுத்திய போது இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வௌிநாட்டு உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரியொருவர் மின்பிறப்பாக்கியின் பாகங்களை கொண்டு வருவதாகத் தெரிவித்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad