கிழக்கில் 24 மணித்தியாலத்தில் 38 கொரோனா தொற்றாளர்கள், மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் தனிமைப்படுத்தல் தொடரும் என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

கிழக்கில் 24 மணித்தியாலத்தில் 38 கொரோனா தொற்றாளர்கள், மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் தனிமைப்படுத்தல் தொடரும் என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர்

கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 38 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (05) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 1323 நபர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் 802 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதாகவும் 539 நபர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஏழு மரணங்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 173 நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும், அம்பாறை பிராந்தியத்தில் 34 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் கல்முனைப் பிராந்தியத்தில் 752 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் கல்முனை நகர் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பு பூரணமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் தனிமைப்படுத்தல் தொடரலாம் என்றார்.  

பொதுமக்கள் சுகாதார திணைக்கள விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு, அல்லது காவல் துறையினருக்கு அறிவிக்குமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment