ஒரே ரொக்கெட்டில் 143 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது - புதிய உலக சாதனை - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

ஒரே ரொக்கெட்டில் 143 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது - புதிய உலக சாதனை

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செயற்கைக் கோள்களை ஏவுவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. அவ்வகையில், இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. 

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த ரொக்கெட், புவி வட்டப் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும், முதல் கட்டமான பூஸ்டர் தனியாக பிரிந்து பூமிக்கு திரும்பியது. அது அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்ட மிதவையில் வெற்றி கரமாக தரையிறங்கியது. 

அதேசமயம், ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 143 செயற்கைக் கோள்களும் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. 

இதில், அரசு தொடர்பான மற்றும் வணிக ரீதியானவை 133 செயற்கைக் கோள்கள் ஆகும். 10 செயற்கைக் கோள்கள் ஸ்பேஸ்எக்சின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள்கள் ஆகும். 

12 ஆயிரம் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் செட்டிலைட் இணைய சேவையை வழங்கும் ஸ்டார்லிங் திட்டத்தில் ஏற்கனவே 1015 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 செயற்கைக் கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பி உள்ளது.

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad