இராஜாங்க அமைச்சர் தயாசிறியின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனா - 118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

இராஜாங்க அமைச்சர் தயாசிறியின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனா - 118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய 118 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவிலுள்ள அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 பேரே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad