கண்டி வைத்தியசாலைக்கு PCR இயந்திரம் கொள்வனவு செய்ய 5 மில்லியன் ரூபா - News View

About Us

About Us

Breaking

Thursday, December 24, 2020

கண்டி வைத்தியசாலைக்கு PCR இயந்திரம் கொள்வனவு செய்ய 5 மில்லியன் ரூபா

இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக கொழும்பு சங்கத்தினால் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு PCR இயந்திர கொள்வனவுக்காக ரூ. 50 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற இந்நிகழ்வில், அச்சங்கத்தின் தலைவர் ஹஸன் ரிபாஸினால் இதற்கான காசோலை, இரத்தினக்கல்‌, தங்க ஆபரணங்கள்‌ மற்றும்‌ கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்‌ இராஜாங்க (மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக் கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க) அமைச்சர் லோஹான் ரத்வத்தேவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த காசோலையை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே கண்டி தேசிய வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் மோஹான் சமரகோன் மற்றும் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் இரேஷா பெனாண்டோ ஆகியோரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில், வைரஸ் நிபுணர் விசேட வைத்தியர் ரோஹித முத்துகல, இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க, இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக கொழும்பு சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சலாஹுதீன், கண்டிய தேசிய வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர் ஏம். றிஸ்வி, பிரேதச சபை உறுப்பினர் வஸீர் முக்தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment