இலங்கை மக்கள் வாழ்வில் சமாதான ஒற்றுமை பரிணமிக்கட்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

இலங்கை மக்கள் வாழ்வில் சமாதான ஒற்றுமை பரிணமிக்கட்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

(ஐ.ஏ. காதிர் கான்)

மலர்ந்துள்ள 2021 புத்தாண்டு, சமாதானம் செளபாக்கியம் நிறைந்த ஆண்டாகவும், கொவிட்-19 வைரஸ் தொற்றற்ற ஆண்டாகவும், இலங்கை வாழ் சகல மக்களின் வாழ்விலும் பரிணமிக்கப் பிரார்த்திப்பதாகவென, முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்துபோன ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அவதிக்குள்ளாகியிருந்தனர். 

அத்துடன், எம்மக்கள் வாழ்வியலில் கடந்துபோன ஆண்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டன. மலர்ந்துள்ள இப்புத்தாண்டில் அப்பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, அம்மக்கள் வாழ்வியலில் ஆரோக்கியச் சூழ்நிலையும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்பட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டு, அனைவரது வாழ்விலும் மிகச்சிறந்த ஆண்டாக சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும் என்பதே, எனது அன்பான பிரார்த்தனையாகும். 

இப்புத்தாண்டில், அனைத்து இன மக்களும் நிம்மதி, சந்தோஷம், அமைதியாக வாழவும், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக வாழவும் மீண்டும் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். 

No comments:

Post a Comment