நுவரெலியாவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றிற்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

நுவரெலியாவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றிற்கு பூட்டு

நுவரெலியா - நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்று இன்று (திங்கட்கிழமை) தற்காலிகமாக மூடப்பட்டது.

நோர்வூட் பகுதியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, இம்மாணவர்களின் பெற்றோர் யாராவது குறித்த தொழிற்சாலையில் பணி புரிகின்றனரா என்பதனை கண்டறிவதற்காகவும், அவ்வாறு இனங்காணப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் இன்று (திங்கட்கிழமை) தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும், இவ்விடயம் தொடர்பாக இன்று மாலை, சுகாதார அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் வழமைபோல் தொழிற்சாலை, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இதுவரையில் 70 பேர் வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment