நாடு பூராகவுமுள்ள தொழில் திணைக்கள அலுவலகங்களின் மூலம் சேவைகளை வழங்க தீர்மானம் - தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

நாடு பூராகவுமுள்ள தொழில் திணைக்கள அலுவலகங்களின் மூலம் சேவைகளை வழங்க தீர்மானம் - தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள்

(க.பிரசன்னா)

பொதுமக்களுக்கு தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதற்காக தொழில் திணைக்களம் நாடு பூராகவுமுள்ள தொழில் திணைக்களத்தின் அலுவலகங்களின் மூலம் சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்றினை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் மற்றும் தொலை நிலை வேலை ஏற்பாடுகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, தொழில் திணைக்களமானது தொழில் திணைக்களத்தின் அலுவலக இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைத் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி நாடு பூராகவும் உள்ள தொழில் அலுவலகங்களின் ஊடாக பொதுமக்களுக்கு தொடர்ச்சியான சேவையை வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் பிரகாரம், பொதுமக்கள் தங்களது அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்குரித்துடைய தொழில் அலுவலகத்திற்கு தொழில் சட்டங்கள் தொடர்புடைய எந்த விடயம் சார்பாகவும் எழுத்து மூலம் முறைப்பாடு அல்லது எழுத்து மூலம் விசாரணையை மேற்கொள்ள முடியும்.

இந்நோக்கத்திற்காக, அத்தகைய அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பவற்றை தொழில் திணைக்களத்தின் அலுவலக இணையத்தளத்தின் http://labourdept.gov.lk/images/PDF_upload/notices/contacts%20by%20type.pdf ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் உரிய எழுத்து மூலமான விசாரணைகளை அட்டவணையில் உள்ள தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடைவிடாத சேவையை வழங்கும் நோக்கில் அலுவலக நேரங்களில் அலுவலகத்திற்கு நிறைவேற்றுத் தரத்திலுள்ள அலுவலர்களுக்கு வருகின்ற உள்வரும் அழைப்புக்களை அவர்களது கையடக்கத் தொலைபேசிக்கு மாற்றக்கூடிய வசதிகளை தொழில் திணைக்களம் வழங்கியுள்ளது. 

அத்துடன் தொழில் திணைக்களத்தின் அலுவலக இணையத்தளத்திற்குச் சென்று http://labourdept.gov.lk/images/PDF_upload/notices/contacts.pdf என்ற இணைப்பின் ஊடாக அத்தகைய அலுவலர்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் பிரகாரம், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தயவு செய்து அலுவலகத்திற்கு வருவதனைத் தவிர்த்து அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் மு.ப. 8.30 இலிருந்து பி.ப. 4.15 மணி வரை வழங்கப்பட்டுள்ள தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment