மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை : சந்தேகநபருக்கு தொடர்ந்து விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை : சந்தேகநபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாந்தை மேற்கில் கொலை செய்யப்பட்ட கிராம அலுவலகர் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம், மன்னார் நீதிமன்றத்தில், நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த தவணையின்போது குறித்த வழக்கு விசாரணை பொலிஸாரிடம் இருந்து சி.ஐ.டி.யினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு பிரிவு, பல்வேறு தரப்பினரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் சுருக்க குறிப்பினையும், மூன்று சான்றுப் பொருட்களையும் மன்றில் பாராப்படுத்தியுள்ளனர்.

கிராம அலுவலகர் கொலை செய்யப்பட்டபோது பயன்படுத்திய மோட்டார் சைக்கில், மோட்டார் சைக்கிலின் உடைந்த கைப்பிடி, கருப்பு நிற தலைக்கவசம் (கெல்மட்) ஆகிய மூன்று சான்றுப்பொருட்களும் இவ்வாறு மன்றில் பாராப்படுத்தப்பட்டது.

மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் தமது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்கு தமக்கு போதிய அளவு கால அவகாசம் தேவை எனவும் மன்றில் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இன்று உத்தரவிட்டார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment