கொவிட் நோய் கட்டுப்பாடு அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா - News View

Breaking

Post Top Ad

Saturday, December 5, 2020

கொவிட் நோய் கட்டுப்பாடு அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாளராக விசேட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா நேற்றுமுன்தினம் (04) கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் திருமதி சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுகாதார சேவையில் 34 வருட கால சேவை அனுபவமும், சுகாதார நிர்வாக சேவையில் 24 வருட கால சேவை அனுபவமும் கொண்ட வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா, இதற்கு முன்பு சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் (வைத்திய சேவை) தரம் 2 இல் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் காலி குழந்தைகள் மருத்துவமனையிலும் பணிப்பாளராக பணியாற்றிய இவர், மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் தனியார் மருத்துவ மேம்பாட்டு பணிப்பாளராகவும், சுகாதார கல்விப் பணியகத்தின் பணிப்பாளராகவும் மற்றும் தேசிய மருதக ஆணைக் குழுவின் தலைவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad