பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கலைக்க தீர்மானமில்லை, புதிய பணிப்பாளர் சபை ஏற்படுத்தவே முடிவு என்கிறார் அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கலைக்க தீர்மானமில்லை, புதிய பணிப்பாளர் சபை ஏற்படுத்தவே முடிவு என்கிறார் அமைச்சர் கெஹெலிய

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதன் பணிப்பாளர் சபையை மாற்றவே முடிவு செய்யப்பட்டுள்ளதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பொதுப் பயண்பாட்டு ஆணைக்குழு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் குறிப்பிட்ட அவர், ஆட்சி மாற்றத்துடன் அரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்கள் பதவி விலகி புதியவர்கள் நியமிக்கப்படுவர். ஆனால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் ஒரு வருடம் சென்றும் அவ்வாறு மாற்றம் செய்யப்படவில்லை. 

மின்சார சபையினூடாக அரசின் கொள்கைகளை முன்னெடுப்பதற்கு தடங்கல் செய்யப்படுகிறதா? என்ற சந்தேக ஏற்பட்டுள்ளது.சில காரணங்களின் அடிப்படையிலே இது தொடர்பில் முடிவு ஏற்பட்டது.

வேண்டுமென்றே தாமதமாக்கும் முன்னெடுப்பு இடம்பெறுவதாக சந்தேகம் உள்ளது. இதனாலே மீள புதிய பணிப்பாளர் சபையை முறையாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

69 இலட்சம் மக்கள் ஆணையுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசிற்கு செயற்பட வாய்ப்பாக இவ்வாறான முடிவுகளை எடுத்து வருகிறோம்.

புதிய பணிப்பாளர் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சில பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment