கொவிட் தொற்றிலிருந்து நாடு முழுமையாக மீண்டெழ இப்புத்தாண்டில் பிரார்த்திப்போம் - உவைஸ் மொஹமட் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

கொவிட் தொற்றிலிருந்து நாடு முழுமையாக மீண்டெழ இப்புத்தாண்டில் பிரார்த்திப்போம் - உவைஸ் மொஹமட் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

கொவிட் - 19 வைரஸ் தொற்றிலிருந்து இலங்கை நாடு முழுமையாக மீண்டெழ, மலர்ந்துள்ள 2021 புத்தாண்டில் பிரார்த்திப்போம் என, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மொஹமட் உவைஸ் மொஹமட், தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மலரும் புத்தாண்டில் ஐக்கியத்துடனும், ஆரோக்கியத்துடனும், பொறுமையாகவும் வாழ நாம் அனைவரும் உறுதி பூணுவோமாக.
அத்துடன், தன்னுள் குடிகொண்டிருக்கும் மமதை, பேராசை, பொறாமை போன்ற தீய குணங்கள் கலைந்து, நற்பயனை அடைந்துகொள்ளவும் பிரார்த்திப்போமாக.

கொவிட் - 19 வைரஸ் தொற்றுப் பரவலிலிருந்து இப்புத்தாண்டில் மீண்டும் எமது நாட்டுக்கு வசந்தம் வரவேண்டும். நாம் அனைவரும் அதற்காக இந்நன்நாளில் பிரார்த்திக்க வேண்டும்.

முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் முழுமையாகவே விடுதலைபெற்று, எல்லோரும் மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க இறைவனின் அன்பும் அருளும் ஆசியும் கிடைக்க வேண்டும்.

கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருக்கும் எமது சகோதர மக்களை வலுவாக்கவும், அவர்கள்மீது நல்லெண்ணங்களை விதைத்து எதிர்பார்ப்புக்களை அறுவடை செய்யும் பொன்னான ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டியும் பிரார்த்திப்போம்.

மலர்ந்துள்ள இப்புத்தாண்டு சுவாத்தியமான, தீர்மானமிக்க புத்தாண்டாக அனைவரது வாழ்விலும் மிளிரவேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன். 

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைந்தாலும், மீண்டும் கிழக்கிலே ஒளிக்கீற்றுடன் புலர்வது போன்று, நமது வாழ்க்கை வட்டமும் ஒளிமயமானதாகவும் சுபீட்சமிக்கதாகவும், இப்புத்தாண்டில் அமைய வேண்டும் என்றும் உளமாறப் பிரார்த்திக்கின்றேன்.

ஐ.ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment