தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் தொடர்பாக புதிய முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு - விபரம் இதோ ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் தொடர்பாக புதிய முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு - விபரம் இதோ !

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 700 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு பிராந்திய தோட்ட நிறுனங்கள் மற்றும் இலங்கை தோட்டக்கார்களின் சங்கம் முன்மொழிந்துள்ளன.

குறித்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து பல முன்மொழிவுகளுடன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை அதிகரிப்பதை நோக்காக் கொண்டு புதிய பல முன்மொழிவுகளை சமர்ப்பித்து தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக கொடுக்க முன்மொழிந்திருக்கின்றோம். 

புதிய முன்மொழிவுகளை சமர்ப்பித்து நாளாந்த சம்பள முறைமைக்கமைய தோட்டத் தொழிலாளார்களுக்கு ஒரு நாளைக்கு வேலை செய்வதற்காக 1,025 ரூபா செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பிரகாரம் அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாகும். 

ஈ.பீ.எப். மற்றும் ஈ,டி.எப். 105 ரூபா, வருகைக்கான கொடுப்பனவு 70 ரூபா, உற்பத்தி கொடுப்பனவு 75 ரூபா மற்றும் பறிக்கப்படும் மேலதிக தேயிலை கொழுந்துகளுக்காகன கொடுப்பனவாக 75 ரூபா என்ற வகையில் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்துக்கு கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கு இந்த மாதிரியின் கீழ் முறையாக சம்பளம் வழங்கப்பட்டால் அவர்களின் மாதாந்த வருமானம் 4,250 ரூபாவினால் அதிகரிக்கும்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் தேயிலை கொழுந்து பறிக்கும் தரநிலை அளவு அதிகரித்துச் சென்றால் அவர்களுக்கு கூடிய மாதாந்த சம்பளம் ஒன்றை பெற்றுக் கொள்ள இதன் மூலம் முடியுமாகின்றது.

புதிய முன்மொழிவுகளின் கீழ் பிராந்திந்திய தோட்ட சங்கங்களின் நிலைப்பாடாக இருப்பது, நாளாந்த சம்பளம் வழங்குவதை தொடர்ந்து மேற்கொள்வதுடன் வருகைக்கான கொடுப்பனவு, உற்பத்தி திறனை உயர்த்துவதற்காக தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் கொடுப்பனவு போன்றவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

அதேபோன்று 3 நாளைக்கு நாளாந்த சம்பளம் மற்றும் 3 நாளைக்கு உற்பத்தி திறனை அடிப்படையாகக் கொண்ட கொடுப்பனவு என்ற இரண்டு சம்பள முறைமையின் கூட்டு என்ற புதிய முன்மொழிவொன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களின் அறுவடையை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியுமாகின்றது.

உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட புதிய முன்மொழிவுகளுக்கு கீழ் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் முதலாவது மாற்று முன்மொழிவானது, தொழிலாளர்களால் பறிக்கப்படும் ஒரு கிலாே கிராம் தேயிலை கொழுந்துக்காக (ஈ.பீ.எப், ஈ.டி.எப் உட்பட) 50 ரூபா செலுத்துதல். 

அதன் பிரகாரம் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 30 முதல் 40 கிலாே கிராம் தேயிலை கொழுந்து பறிக்கும்போது (தற்போது நடைமுறையில் இருக்கும் தரநிலையைவிட) அவர்களின் வருமானத்தை இதன்போது அதிகரித்துக் கொள்ள முடியுமாகின்றது.

50 ரூபா செலுத்துதலின் பிரகாரம் 20 கிலாே கிராம் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர் ஒருவருக்காக நாளொன்றுக்கு 1000 ரூபா பெற்றுக் கொள்ள முடியுமாவதுடன் அதன் மூலம் மாதச் சம்பளமாக 25 ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்ளலாம் 

தற்காலத்தில் பிராந்திய தோட்ட கம்பனிகளுக்கு சொந்தமான தோட்டங்களில் சாதாரண நாளொன்றில் தேயிலை கொழுந்து பறித்தல் 20 தொடக்கம் 22 கிலாே கிராம் வரை இடம்பெறுகின்றது. 

எவ்வாறு இருந்தபோதும் சிறந்த தேயிலை பறிப்பவர்களில் அதிகமானவர்களின் நாளாென்றுக்கு சாதாரணமாக தேயிலை காெழுந்து அறுவடை 30 தொடக்கம் 40 கிலாே கிராம் வரை இருக்கின்றது. 

இந்த முறையின் மூலம் அவர்களுக்கு மாதாந்தம் 37 ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து 62 ஆயிரம் ரூபாவரை மாதாந்த சம்பளத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமாகின்றது.

No comments:

Post a Comment