சூழலுக்கு ஏற்புடையதல்ல என கருதும் காடுகளை அழித்து சூழலுக்கு ஏற்ற காடுகளை வளர்க்க அரசாங்கம் தீர்மானம் - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

சூழலுக்கு ஏற்புடையதல்ல என கருதும் காடுகளை அழித்து சூழலுக்கு ஏற்ற காடுகளை வளர்க்க அரசாங்கம் தீர்மானம் - மஹிந்த அமரவீர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

தேசிய ஆடையை அணிந்து, தேசிய உணவுகளை உட்கொண்டு தேசியத்தை வழக்கும் நாடாக இலங்கையை மாற்றுவதும், சூழலுக்கு ஏற்புடையதல்ல என கருதும் காடுகளை அழித்துவிட்டு சூழலுக்கு ஏற்ற காடுகளை வளர்க்கவும் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

சுற்றாடல், வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் அமைச்சுக்கள் மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் வளங்களை பாதுகாத்து தேசிய உணவு தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளவே நினைகின்றோம். அதற்காக காடுகளை அழித்து, வளங்களை நாசமாக்கி தேசிய உற்பத்தியை உருவாக்க நினைக்கவில்லை. எமது உற்பத்தி வளங்களை வைத்துக் கொண்டே நாம் எமது தேசிய உற்பத்தியை உருவாக்கவுளோம். 

தேசிய உற்பத்தி குறித்து இன்று எமது உற்பத்தியாளர்களுக்கு பாரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டின் 103 கங்கைகளை தூய்மைப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, சகல அதிகாரிகளுக்கும் இதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்கி குடிநீர் வசதிகளை சகலருக்கும் செய்து கொடுக்கும். தேசிய ஆடையை அணிந்து, தேசிய உணவுகளை உட்கொண்டு தேசியத்தை வழக்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம். 

950 மில்லியன் சொபின் பைகளை ஒரு ஆண்டுக்காக நாம் பயன்படுத்துகின்றோம். ஒரு நாளைக்கு 10 மில்லியன் உணவுகளை சுற்றும் "லஞ்ச்சீட்" பயன்படுத்துகின்றோம். பிளாஸ்டிக் பயன்பாடுகள், இலத்திரனியல் கழிவுகள் என எமது சூழலை நாளுக்கு நாள் நாசமாக்கிக் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் நிறுத்தி மாற்றீடாக சூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை பயன்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

மணல் அகழ்வு வேலைத்திட்டங்களில் எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளையும் நாம் அனுமதிக்க மாட்டோம், அபிவிருத்திக்கு தேவையான மணல், கல் அவசியம். அதற்கான சூழல் கருத்தில் கொள்ளாது இதனை செய்வதை அனுமதிக்க முடியாது, சட்டவிரோத மணல் அகழ்வு, கல் அபகரிப்பு செயற்பாடுகள் அனைத்திற்கும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும் சூழலுக்கு ஏற்புடையதல்ல என கருதும் காடுகளை அழித்துவிட்டு சூழலுக்கு ஏற்ற காடுகளை வளர்க்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். அம்பாந்தோட்டையில் இதன் முதல்கட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இயற்கையை பேசுவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

No comments:

Post a Comment