அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு, கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் - கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு, கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் - கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன

அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (6) நடைபெற்ற கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மின்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே இருப்பதாக கவலை வெியிட்டார்.

மேலும், அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸின் தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு தேவையான துறைமுகங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்தபோது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்தினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தில் கந்தர துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.

குறித்த துறைமுகம் சுமார் 4 பில்லியன் செலவில் அமைக்கப்படவள்ள நிலையில், இந்த துறைமுகமானது நூற்றுக்கான பலநாள் கலங்களும் சிறு மீன்பிடிப் படகுகளும் பயன்படுத்த கூடிய நவீன உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment