வைத்தியர், தாதியர்கர் உள்ளிட்ட 14 பேருக்கு தொற்று - இரத்தினபுரி போதனா நோயாளர் விடுதி மூடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

வைத்தியர், தாதியர்கர் உள்ளிட்ட 14 பேருக்கு தொற்று - இரத்தினபுரி போதனா நோயாளர் விடுதி மூடல்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் மற்றும் இரண்டு தாதியர்கள், இரண்டு சேவையாளர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலையின் 24ஆவது விடுதி தற்போது (30) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கும், இரண்டு தாதியர்களுக்கும் மற்றும் இரண்டு சேவையாளர்களுக்கும், கொவிட் 19 தொற்று குறித்து சந்தேகத்தின்பேரில் மேற்படி வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள 9 பேர் உட்பட மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர இன்று( 30) தெரிவித்தார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட சேவையாளர்களுக்கு நேற்றைய தினம் (29) மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போதே இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி வைத்தியசாலையின் ஏனைய நடவடிக்கைகளில் எவ்வித சிக்கலும் எற்படாது என்றும், மற்றும் கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் தனியாக பிரிக்கப்பட்டு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால் எஹலியகொடை பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவுகளும் மற்றும் கொடக்கவெல பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரொனா தொற்று அதிகரித்து வருவதை கருத்திற் கொண்டு பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அத்தோடு அனைவரும் காலையிலும் மாலையிலும் சுடு நீரில் உப்பு கலந்து தொண்டையின் உள் பகுதிக்கு செல்லும் வகையில் கழுவ வேண்டும். அத்துடன் அடிக்கடி சுடு நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் தொற்று உடம்புக்கு செல்வதை தவிர்க்க முடியும்.

கொரோனா தொற்று தடுப்பு ஊசி கிடைக்குமானால் நோயை கட்டுபடுத்த முடியும். அத்தோடு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றும்

சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்தார்.

(சிவா ஸ்ரீதரராவ், பாயிஸ்)

No comments:

Post a Comment